லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் '2.O'. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடித்திருக்கும் இப்படத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். இந்தியாவிலேயே ரூ550 கோடிக்கு மேல் செலவழித்து மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் '2.O' படத்தின் கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு இயக்குனர் ஷங்கர் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் 14ஆம் தேதிக்குள் அனைத்து கிராபிக்ஸ் பணிகளையும் முடித்துத் தர வேண்டும் என்று கெடு விதித்துள்ளார். மேலும் கிராபிக்ஸ் பணிகள் முடிந்த பிறகுதான் பின்னணி இசை அமைக்க இருப்பதாகவும், பின்னணி இசைக்கு குறைந்தது ஒரு மாதமாவது தனக்கு வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்ட்ரிக்ட்டாக கேட்டுள்ளதால் இயக்குனர் ஷங்கர் கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.