
'ஜப் ஹாரிமெட் செஜால்' படத்தை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தற்போது 'ஜீரோ' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோரும் நடிக்கின்றனர். சமீபத்தில் கமலுடன் நடந்த சந்திப்பில் ஹேராம் படத்தின் உரிமையை வாங்கிய ஷாருக்கான், அப்படத்தை இந்தியில் ‘ரீமேக்’ செய்து அவர் நடிக்கபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஜீரோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தீவிரமாக நடித்து கொண்டிருக்கிறார் நடிகர் ஷாருக்கான். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவு நேரத்திலேயே நடைபெறுவதால் 7 மணிக்கு ஆரம்பிக்கும் படப்பிடிப்பு மறுநாள் அதிகாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இந்த இரவு நேர படப்பிடிப்பிற்கு ஷாருக்கான் தினமும் ஹெலிகாப்டரில் சென்று வருகிறார். மேலும் அதற்கு காரணம் சொன்ன ஷாருக்கான், மும்பை நகர போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காகவே இப்படி ஹெலிகாப்டரில் படப்பிடிப்பிற்கு செல்வதாக தெரிவித்தார்.