
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், திரையுலகில் கமல்ஹாசன், ஜி.வி.பிரகாஷ் குமார், விவேக் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவது போல் தற்போது காமெடி நடிகர் சதீஷும் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா...என்று ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தன் கருத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அதில்..."லண்டனில் இருக்கும் ஒரு தொழிலதிபர் ஆஸ்ரேலியாவில் இருந்து தாதுப்பொருளை, தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அதை சுத்த தாமிரமாக மாற்றி, அரசுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டு போரது தான் #ஸ்டெர்லைட். இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கும் பிரச்சனை அல்ல, இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா..? #பேன் ஸ்டெர்லைட்" என்று பதிவிட்டுள்ளார்.