Skip to main content

சர்கார் படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை..! ஹைகோர்ட் ரத்து..ரசிகர்கள் அதிர்ச்சி !

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
sarkar

 

 

 

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள 'சர்கார்' வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதற்கிடையே தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் படங்களை கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ, அதிக விலைக்கு டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் சமீபத்தில் தெரிவித்து, பின் இதை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கூடுதல் காட்சிகள் திரையிட தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து தேவராஜ் பேசும்போது... "சர்கார்' உள்ளிட்ட படங்களில் விதிகள் மீறப்படுகிறதா என்று கண்காணிப்பேன். நடவடிக்கை இல்லாவிட்டால் வழக்கு தொடுப்பேன். ஒரு ரூபாய் அதிகம் வாங்கினாலும், கூடுதல் காட்சி அனுமதி இன்றி ஓட்டினாலும் கண்டிப்பாக வழக்கு போடுவேன். நீதிமன்றத்திற்கு தேவை ஆதாரம். அந்த ஆதாரத்துடன் வழக்கு தொடுப்பேன்" என்று எச்சரித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கால் தற்போது சர்கார் படத்தின் சிறப்பு காட்சிகள் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்