Skip to main content

மீண்டும் லொள்ளு சபா கூட்டணியில் சந்தானம் 

Published on 03/03/2018 | Edited on 05/03/2018
santhanam


லொள்ளு சபா புகழ் ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து வெற்றிபெற்ற படம் தில்லுக்கு துட்டு. இதையடுத்து சந்தானம் நடிப்பில் சக்கபோடு போடு ராஜா படம் சமீபத்தில் வெளியானது. இதை தொடர்ந்து கைவசம் சர்வர் சுந்தரம், மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள சந்தானம் தற்போது மீண்டும் தனது குருநாதர் ராம்பாலாவுடன் தில்லுக்கு துட்டு 2ஆம் பாகம் மூலமாக இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கிறார். சந்தானத்துடன் நாயகியாக தீப்தி நடிக்கும் இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில், இயக்குநர் ராம்பாலா , ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி , இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்படத்தின் முதல்கட்ட படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.

சார்ந்த செய்திகள்