நடிகைகள் பலரும் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை #MeToo மூவ்மெண்ட் மூலம் பகிர்ந்து வரும் நிலையில் கன்னட நடிகை சங்கீதா பட் என்பரும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை #MeToo வில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமிழில் 'லொள்ளுசபா' ஜீவா நடித்த 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தில் நடித்துள்ள அவர் தனக்கேற்பட்ட பாலியல் தொல்லை குறித்து சமூகவலைத்தளத்தில் பேசியபோது...
"எனக்கு 15 வயது இருக்கும்போதே இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக அவரது காரில் அழைத்துச் சென்று சில்மிஷங்கள் செய்தார். நான் அதிர்ச்சியானேன். பின்னர் 2016ஆம் ஆண்டு தமிழில் டி.வி நகைச்சுவை நடிகர் கதாநாயகனாக நடித்த படத்தில் நடித்தேன். அவரது பைக் பின்னால் நாம் அமர்ந்து செல்வதுபோன்ற காட்சியை எடுத்தனர். பைக்கை வேகமாக ஓட்டி சென்று திடீரென்று நிறுத்தினார். அப்போது என்னிடம் நீங்க அந்த பிராவா அணிந்து இருக்கிறீர்கள் என்று கேட்டு ஆபாசமாக பேசினார். மேலும் சில முன்னணி நடிகர்கள் இயக்குனர்களும் பாலியல் தொல்லை கொடுத்தனர். நான் விளம்பரத்துக்காக பாலியல் புகாரை கூறவில்லை. யாருடைய பெயரையும் நான் சொல்லவில்லை. அந்த சம்பவங்கள் எனக்கு வேதனையை ஏற்படுத்தியதால் வெளிப்படுத்தினேன். இப்போது சினிமாவை விட்டு விலகி அமைதியாக வாழ்கிறேன். என்னைப்பற்றி தவறாக பேச வேண்டாம்" என்றார்.