Published on 03/12/2020 | Edited on 03/12/2020

தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவரான சாண்டி மாஸ்டர், தற்போது திரைப்படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அவருடைய பேச்சு, காமெடி ஆகியவற்றுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
இதனைத் தொடர்ந்து திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் சாண்டி. அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ரேஷ்மா, ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் சாண்டியுடன் நடித்து வருகிறார்கள்.
'ஹாரர்' படமாக உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.