![Samyukta about getting a chance to film Vaathi](http://image.nakkheeran.in/cdn/farfuture/PLNiWasjmHEXYBfFE8acxU7lXwdYJxu8NNxheXt_Dek/1676455406/sites/default/files/inline-images/Sa%20out.jpg)
மலையாளத்தில் முன்னணி நடிகையான சம்யுக்தா, தமிழிலும் தெலுங்கிலும் வாத்தி படம் மூலம் அறிமுகமாகிறார். சென்னையில் நடைபெற்ற வாத்தி இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார்.
“இந்த மாதிரி தமிழ் சினிமா விழா மேடையில் நிற்பதற்கு; தமிழில் அறிமுகமாவதற்கு நான் ஐந்து வருடங்கள் காத்திருந்தேன். அடியாத்தி இது என்ன பீலு என்கிற ரீதியில் இந்த மேடையில் நிற்பது இருக்கிறது. வாழ்க்கையில் எல்லா விசயங்களுமே திட்டமிட்டபடி நடக்காது. அதுவாகவே நடக்கும். எனக்கு என்னடா இன்னும் ஒரு நல்ல, அழகான படவாய்ப்பு வரவே இல்லைன்னு இருந்தேன். அப்போது ஒரு தெலுங்கு படத்திற்காக ஹைதராபாத் போயிருந்தேன். அந்த படக்குழு தான் சொன்னாங்க, இந்த தயாரிப்பு நிறுவனம் ஒரு தமிழ் படமும் பண்றாங்க. நீங்க அதுக்கு ஒரு லுக் டெஸ்ட் பண்ணுங்க. அந்த டீமுக்கு பிடிச்சிருந்தால் நீங்க அந்த படத்தில் ஹீரோயினா ஆகலாம்னு சொன்னாங்க.
அப்படித்தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஹைதராபாத் போய் அங்கிருந்து ஒரு அழகான தமிழ்ப்பட வாய்ப்பு அமைந்தது. அதற்காக இயக்குநருக்கும் படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தனுஷ் நடித்த 3 ரொம்ப அழகான படம். அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இந்த படத்திற்கு முன்பு நான் தனுஷ் ரசிகை. இந்த படத்திற்கு பிறகு டை ஹார்ட் ஃபேன் ஆகிட்டேன்.”