Skip to main content

பார்த்திபன் பட ரீமேக்கில் சமுத்திரக்கனி!

Published on 27/02/2018 | Edited on 27/02/2018
par


கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை தொடர்ந்து இயக்குனர், நடிகர் பார்த்திபன் தன் இயக்கத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்காக மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் தற்போது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் நடிகர் பார்த்திபனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று சமீபத்தில் தெரிவித்தார். இவர் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த கையோடு 'உள்ளே வெளியே 2' படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியானவுடன், படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்