
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமான 'மகாநதி' படத்தில் நடித்து வருகிறார். தமிழிலும் 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். மற்றும் பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். மேலும் சாவித்திரியை பிரபல நடிகையாக உயர்த்திய, பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும் நடிக்கின்றனர். வருகிற மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் பத்திரிகை ரிப்போர்டராக நடிக்கும் சமந்தா தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை முடித்திருக்கிறார். மேலும் பன் சாப்பிட்டுகிட்டே டப்பிங் பேசிய தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தற்போது பதிவு செய்திருக்கிறார்.