Skip to main content

பிக்பாஸ் பார்பவர்கள் நாய்களா? சர்ச்சையை ஏற்படுத்திய சாக்‌ஷி

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனிலும் கமல் ஹாசன்தான் தொகுத்து வழங்குகிறார்.  
 

biggboss

 

 

இந்த நிகழ்ச்சியை மக்கள் பலரும் பார்த்து வருகிறார்கள் என்று கமல் ஹாசன் உள்ளே பங்குபெற்றிருக்கும் போட்டியாளர்களுக்கு அறிவுரை செய்வார். மக்கள் பலரும் பார்க்கும் நிகழ்ச்சியாக இது இருப்பதனால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் வரை வந்துள்ளது.

இந்நிலையில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
 

mahamuni


இந்த நிகழ்ச்சியில் 74-வது நாளில் போட்டியாளர்கள் வனிதாவிற்கும் ஷெரினுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது வனிதா, ஷெரின் தர்ஷனுடன் காதலில் உள்ளதாக தெரிவித்தார்.

இதனால், கோபமடைந்த ஷெரின் வனிதாவிடம் சண்டையிட்டுவிட்டு தனியா சென்று அழுது கொண்டிருந்தார்.

அப்போது அவரை சமாதானம் செய்வதற்காக சென்ற சாக்‌ஷி, நாய்கள் ரோட்ல குரைக்கும் அத பத்தி கவலைப்படுவியா என்றும்.. நான் வெளியே இருக்கும் மக்களைத் தான் பேசுகிறேன், பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 

zombie


இதனால் கோபமடைந்த பல இணையவாசிகள் எப்படி அவர் மக்களை நாய்கள் என்று சொல்லலாம் என்று சமூக வலைதளத்தில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். 
 

 

 

சார்ந்த செய்திகள்