Published on 10/03/2018 | Edited on 12/03/2018
ஒருபுறம் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ள நிலையில் இன்னொருபுறம் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வும் நடந்தவண்ணம் உள்ளன. இதில் ஏற்கனவே அஜித் ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுளார். மேலும் யோகி பாபு, தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில், தற்போது காமெடி நடிகர் ரோபோ சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்காக ரோபோ சங்கர் 50 நாட்கள் ஒதுக்கி கால்ஷீட் கொடுத்திருக்கிறார். முதல் முறையாக அஜித்துடன் நடிக்க இருக்கும் ரோபோ சங்கர், அஜித்தை நேரில் பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.