ஹூசைன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அல்டி’ படம் குறித்து சமீபத்தில் நேர்காணல் எடுக்கப்பட்டது. அதில் அந்த படத்தின் நடன ஆசிரியர் ராபர்ட் மற்றும் அப்படத்தின் ஹீரோ அன்பு மயில்சாமி, இயக்குனர் ஹூசைன் கலந்துகொண்டனர். இந்த படத்தின் ஹீரோ அன்பு மயில்சாமி, பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி அவர்களின் மகன் ஆவார். நேர்காணலில் ராபர்ட் மாஸ்டர் அஜித், விஜய், சிம்பு ஆகியோருடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். மேலும் சிம்பின் வளர்ச்சியைத் தடுப்பது யாராக இருக்கலாம் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
‘லவ் டுடே’ படத்திலேயும் ‘சுறா’ படத்திலேயும் விஜய் சாருடன் பணி புரிந்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்?
‘லவ் டுடே’ படம் பண்ணும்போது அவர் வெற்றிபெறவில்லை. அவர் வளர்ந்துவந்த ஸ்டேஜ் அது, அப்போது சாதாரணமாகதான் ஆடினார். ‘சுறா’ படத்தின்போது அவர் வெற்றிபெற்று பெரிய நடிகராகிவிட்டார். அவருடைய நடனமும் வெறித்தனமாகிவிட்டது. இது பலரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். பெரியாளாகிவிட்டால் அனைவரும் இது போதும் என்று நிறுத்திவிடுவார்கள். ஆனால், விஜய் சார் இன்னும் நிறைய ஆட வேண்டும் என்று இருக்கிறார். அவர் இருக்கும் நிலைக்கு அது நிறையப் பெரிய விஷயம்.
நீங்க ‘ராசி’ படத்திலேயும் அஜித் சாருடன் பணி புரிந்திருக்கிறீர்கள், ‘வரலாறு’ படத்திலேயும் அவருடன் பணி புரிந்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?
விஜய் சாருக்கு சொன்னேன் ஒரு ட்ரான்ஸ்மிஷன். ஆனால், அஜித் மாறவே இல்லை. ராசி படத்தில் எப்படி என் மீது தோளில் கைபோட்டு சாப்பிட்டியா ராபர்ட் கேள்வி கேட்டாரோ அதேபோல்தான் வரலாறு பட படப்பிடிப்பிலும் அதே கேள்வியை அதே ஸ்டைலில் கேட்டார். என்ன சிக்ஸ் பேக எதுவும் ட்ரை பன்றியா உடம்பு இப்படி இருக்கு என்று உடல்நலம் குறித்து விசாரிப்பார். என்னைப் பற்றி மட்டுமல்லாமல், அம்மா அப்பா நன்றாக இருக்கிறார்களா என குடும்பம் குறித்தும் விசாரிப்பார். அது அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அவருடைய நடனம் எப்போதும் போல ஸ்டைலாக அவர் நடந்து வந்தாலே போதும், நின்றாலே போதும்.
சமீபத்தில் சிம்பு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு தன் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள் என்று சொன்னார். யார் சிம்புவை படம் பண்ண விடாமல் தடுக்கிறார்கள்?
அவர் ஒரு பேட்டில கூடச் சொல்லியிருந்தார். நான் ஒன்பது மாச குட்டியாக இருக்கும் போதிலிருந்து நடித்து வருகிறேன். எனக்கு சினிமாதான் எல்லாமாகவும் இருந்தது. அதனால்தான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டேன்.
சிம்பு தினசரி இரவு மியூசி வாசித்துவிட்டு, பாடல்கள் எழுதிவிட்டு, நண்பர்களுடன் பேசிவிட்டு அதிகாலை நான்கு மணி போலதான் தூங்குவார். காலையில் ஒன்பது மணிக்கு கால்ஷீட் வச்சா அவரால எப்படி வர முடியும், ஆனாலும் காலையில் சீக்கிரம் எழுந்துவிடுவார் ஷூட்டுக்கு வரக் கொஞ்சம் டிலே ஆகிவிடும்.
அவரை தடுக்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. இப்போது சந்திரனென்று இருந்தால் சூரியனென்று இருக்கும், இரவு என்று இருந்தால் பகல் இருக்கும், அதுபோலத்தான் சிம்புவுக்கு எதிராக இருக்க மாட்டார்களா என்ன. உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். அவர்கள்கூட சிம்புவை படம் பண்ண விடாமல் தடுக்கலாம். அதைத்தான் சிம்பு சூசகமாக சொல்லியிருக்கிறார்.