
ஆர்.ஜே-வாக இருந்து பின்பு சினிமாவில் எண்ட்ரியாகி நடிகரகவும் இயக்குநராகவும் வலம் வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. இதனிடையே ஆண்டு தோறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் தமிழ் ஒளிபரப்பில் வர்ணனையாளராக பணியாற்றிர் வந்தார். ஆனால் இந்தாண்டு அவர் வர்ணனை செய்யவில்லை.
இந்த நிலையில் இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் வர்ணனை செய்யாதது குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “வருஷத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச மாதங்கள் மார்சி கடைசி, ஏப்ரல், மே தான். இந்த மாதங்களில்தான் எனக்கு ரொம்ப பிடிச்ச வர்ணனை செய்யும் வேலையை செய்வேன். அதனால் இந்த வருடமும் என்னை எதிர்பார்த்து கேட்ட தம்பிகளிடம் நான் சொல்லிக விரும்புவது இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் நான் வர்ணனை செய்ய மாட்டேன். எனக்கும் ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கிறது. நானும் உங்களை மிஸ் செய்வேன்.
நான் எப்போது ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தையும் செம்மையாக செய்ய வேண்டும் என நினைப்பேன். இப்போது ஒரு படம் இயக்கி வருகிறேன். அதனால் நிறைய பொறுப்பு இருக்கிறது. இதன் காரணத்தால் இந்த வருஷம் ஐ.பி.எல்-லில் வர்ணனை செய்யவில்லை. இதை சொல்லும் போதே ரொம்ப ஃபீலிங் ஆகிறது. கடந்த 10 வருஷமாக நீங்க என்னை எங்க பார்த்தாலும் ஐ.பி.எல். வர்ணனை பற்றி கேட்கிறீர்கள். நிச்சயம் அடுத்த சீசனில் வருவேன் என நம்புகிறேன்” என்றுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி தற்போது சூர்யாவின் 45வது படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.