உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா வட கொரியா நாடு குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில்...''உலகின் மிகவும் அமைதியான நாடாக வட கொரியா தற்போது இருப்பது போன்று தோன்றுவதை யாராவது கவனித்தீர்களா?'' எனப் பதிவிட்டுள்ளார்.