Skip to main content

200 ஏழை குடும்பங்களுக்கு தினசரி உதவும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது. 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  rakul preet singh


அதேபோல இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே போகிறது. இதுவரை இந்தியாவில் இந்த வைரஸால் இறந்தோர் எண்ணிக்கை 68ஆக உள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் லாக்டவுனை அறிவித்துள்ளார், பிரதமர் மோடி. ஏப்ரல் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும் லாக்டவுன் இன்னும் நீட்டிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த லாக்டவுனால் அடிப்படை தேவைகள் இன்றி கஷ்டப்படும் 200 ஏழை குடும்பங்களுக்கு தினசரி உதவி வருகிறார் நடிகை ரகூல் ப்ரீத் சிங். 

 

Nakkheeran app


இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்கள் வீட்டுக்கு அருகில் 200 ஏழை குடும்பங்கள் அடிப்படை தேவைகள் இன்றி கஷ்டப்படுவதை என் தந்தை கண்டறிந்தார். தினமும் அவர்களுக்காக 2 வேளை உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் தொடர்ந்து அவர்களுக்கு உதவ தீர்மானித்துள்ளோம். நம்மில் பலர் நல்ல வசதியுடன் இருக்கிறோம். அவசர காலங்களுக்கு தேவையான இருப்பிடம், உடை, உணவு அனைத்தும் நம்மிடம் உள்ளது. ஆனால் அவற்றை நாம் சமூகத்துக்கும் கொடுத்து உதவ வேண்டும். என்னை பொறுத்தவரை அந்த மக்கள் சாப்பிடும்போது அவர்களின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையாக எதுவும் இல்லை. அதுதான் எனக்கு அதீத மகிழ்ச்சியை தருகிறது. எனவேதான் என்னால் முடிந்த இந்த சிறு உதவியை செய்து வருகிறேன்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்