Skip to main content

''அங்கு போனால் தொடர்பு வேண்டுமானால் கிடைக்கலாம்...ஆனால் பட வாய்ப்பு கிடைக்காது'' - ரகுல் ப்ரீத் சிங் 

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

தேவ், என்ஜிகே படங்களுக்கு பிறகு நடிகை ரகுல் பிரீத் சிங் தற்போது ‘இந்தியன் 2 ’படத்தில் நடித்து வரும் நிலையில் தன் எதிர்கால திட்டங்கள் குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அவர் பேசியபோது.... 

 

rakul

 

 

''நடிகைகள் சரியான முடிவுகள் எடுப்பது முக்கியம். அதேபோல் நம் தவறுகளுக்கு நாம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதற்கு முன்பு செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது என்று தற்போது ஜாக்கிரதையாக இருக்கிறேன். இப்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடிக்கிறேன். இது தவிர மேலும் மூன்று படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. பார்ட்டிகளுக்கு போனால்தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று பேசுகின்றனர். அங்கு தொடர்புகள் வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே பட வாய்ப்புகள் தேடி வரும்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்