ரஜினியின் 166வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![rajnikanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/B0N5uSz7TvXFmFzuxyl5z3A13PZErzkwzfcQIKnC-Gk/1553838566/sites/default/files/inline-images/rajini_82.jpg)
பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரஜினி, தேதிகள் ஒதுக்கியுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது என்றும். நயன்தாராதான் இந்த படத்தில் ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது.சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கவுள்ளார்.
தீபாவளிக்குள் ஒட்டுமொத்த படபிடிப்பையும் முடித்துவிட்டு, பொங்கலுக்கு இந்த படத்தை திரையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகவில்லை. அது வெளியாகும்போது பட வெளியீட்டையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.