இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி 13 ஆம் தேதி முதல் 15 தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை வைத்தார். அதோடு அனைவரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்கவும் அறிவுறுத்தினார். அதன் படி ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படத்தில் தேசிய கொடி வைத்தும் நேற்று தன் வீட்டிற்கு முன்பு தேசிய கொடியையும் பறக்கவிட்டார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அனைவரும் தங்கள் வீட்டின் முன்பு தேசிய கொடியேற்றுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டுள்ள வீடியோவில், " வணக்கம். நம்ம நாடே வணங்கும் விதமாக, நம் எல்லாருடைய ஒற்றுமையை காட்டும் விதமாக வருகிற 15-ஆம் தேதி ஜாதி, மதம், கட்சி என எந்த வேறுபாடும் இல்லாமல் நாம் எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு நம் வீட்டிற்கு முன்பு கொடியையை பறக்கவிட்டு நாம் பெருமைப்படுவோம். நாடு இல்லை என்று சொன்னால் நாம் இல்லை. நாம் எல்லாரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த்" என பேசியுள்ளார். அதோடு இது தொடர்பான அறிக்கையையும் பகிர்ந்துள்ளார். ரஜினி பேசும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பலரின் கவனம் பெற்று வைரலாகி வருகிறது.
#ஒவ்வொரு__வீட்டிலும்__தேசியக்கொடி🇮🇳#நாம்__இந்தியனென்று__பெருமைகொள்வோம்💪 pic.twitter.com/VXrQSqNf8h— Rajinikanth (@rajinikanth) August 13, 2022