Skip to main content

கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த் 

Published on 07/05/2018 | Edited on 09/05/2018
rajini kaala


ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற மே 9ஆம் தேதி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் சேர்ந்து  'காலா' பட பாடல்கள் உள்ளடக்கிய இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியை நேரடியாக இணையதளங்களில் வெளியிடவும் தயாரிப்பாளர் தனுசின் வுண்டர்பார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் அவரவர் சமூகவலைத்தளங்களில் ஒளிபரப்பாகும் நேரலையயை கண்டுகளிக்கலாம். மேலும் படக்குழுவினர்கள், சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்துக் கொள்ள இருக்கும் இந்த இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சி பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சார்ந்த செய்திகள்