Published on 09/03/2018 | Edited on 10/03/2018

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கியதையடுத்து கட்சி பிணிகளில் பிசியாகி வருகிறார். சமீபத்தில் எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் அரசியல் தொடர்பான கருத்துகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய ரஜினி தற்போது சமூக வலைதளங்களான ‘பேஸ்-புக்’, இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கணக்குகளை தொடங்கினார். அதில் அவர் பெயரை ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே டுவிட்டரில் அவர் ‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கணக்கு தொடங்கி இருந்தார். அதில் இதுவரை அவரை 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடருகின்றனர். இந்நிலையில் தற்போது டுவிட்டரிலும் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை துறந்து ரஜினிகாந்த் என தன் பெயரை மாற்றி உள்ளார்.