சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் தம்பி ராமையா கதை நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ராஜா கிளி’. நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என மற்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளார் தம்பி ராமையா. இவரது மகனான நடிகர் உமாபதி ராமையா இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க ஸ்வேதா, சுபா, பிரவீன், முபாஸிர், இயக்குநர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 13-ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் போது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மற்றும் கனமழை காரணமாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. மழை நாட்களில் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை சமாளிக்கவே போராடுவதாகவும் அதனால் படத்தை டிசம்பர் 27 ஆம் தேதிக்கு வெளியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ராஜா கிளி' இன்றைய காலத்திற்கு ஏற்ற 'ரத்தக்கண்ணீர்' போன்ற ஒரு நல்ல கருத்தம்சம் கொண்ட படம் என்பதால் மக்கள் இந்த படத்தை தங்கள் பிரச்சனைகளை மறந்து திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ரிலீஸ் தேதி மாற்றம் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.