உலகம் முழுக்க கரோனா அச்சத்தால் மக்கள் பீதியில் இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் சைமன் கரோனாவால் இறந்துவிட்டார். அவருடைய உடலைப் புதைக்கவிடாமல் ஒருசிலர் போலீஸாரிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்குப் பலர் தங்களின் கண்டனக் குரல்களை எழுப்பினார்கள். உடலைப் புதைக்கவிடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து நடிகர் விஜயகாந்த், கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய நிலம் தரவில்லை என்றாலோ, பிரச்சனை செய்தாலோ தன்னுடைய சொந்தக் கல்லூரியில் இடம் தருகிறேன் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜயகாந்தின் இந்த அறிவிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர். தெலுங்கு நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் விஜயகாந்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். அதில், "கரோனாவால் பாதிக்கப்படு உயிரிழந்தவர்களை, அவரவர் சமூகத்துக்கான மயானத்திலேயே அடக்கம் செய்வது மறுக்கப்பட்டால், அவர்களைத் தங்கள் கல்லூரியின் நிலத்தில் அடக்கம் செய்யலாம் என்று கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் செயல் அற்புதமானது, உன்னதமானது".