பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இவருக்கு வயது 32. மாடலிங் துறையில் பிரபலமான இவர், நஷா என்ற திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி சர்ச்சைக்குள் உள்ளானார். 2020ஆம் ஆண்டு தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டார்.
கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருடைய மறைவுச் செய்தியை பூனம் பாண்டே அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு அறிக்கையைப் பகிர்ந்து கொண்ட பின்னர் இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.
பூனம் பாண்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது “இன்றைய காலை எங்களுக்கு கடினமானது. எங்கள் அன்புக்குரிய பூனத்தை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இழந்துவிட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் ஆழ்ந்த வருத்தத்தை அடைகிறோம். அவளுடன் தொடர்பு கொண்ட ஒவ்வொரு உயிரினமும் தூய அன்பையும் கருணையையும் சந்தித்தன. துக்கத்தின் இந்த நேரத்தில், நாங்கள் பகிர்ந்து கொண்ட எல்லாவற்றிலும் அவளை அன்புடன் நினைவுகூறுகிறோம்.