பல வருடங்களாக சர்ச்சைகளை ஏற்படுத்தியே பிரபலமானவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்படி சுய விளம்பரத்திற்காக எதையாவது பரபரப்பாக செய்து ட்ரெண்ட் ஆகும் பூனம் பாண்டே, ஊரடங்கு காலத்திலும் தனது காதலருடன் காரில் பயணம் மேற்கொண்டு சிக்கினார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலர் சாம் பாம்பேவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி பூனம் பாண்டே - சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் பூனம் பாண்டே, ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திருமணமாகி பத்து நாட்களில் காதல் கணவர் மீது பாலியல் புகார் அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சியளித்தது. நடிகை பூனம் பாண்டே கூறிய புகாரில், தனது கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கொடுமை படுத்துவதாகவும், இதை எதிர்த்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். எனவே அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கணவரை மன்னித்து மீண்டும் ஏற்றுகொள்வதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கணவருடன் சமாதானம் ஆன பிறகு இதுகுறித்து தெரிவித்துள்ள பூனம், “நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசிக்கிறோம். எங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுவிட்டன. எந்த குடும்பத்தில்தான் சண்டை சச்சரவு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.