பல வருடங்களாக எதையாவது சொல்லி அல்லது வீடியோ, புகைப்படங்கள் வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியே பிரபலமானவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்படி சுய விளம்பரத்திற்காக எதையாவது பரபரப்பாக செய்து ட்ரெண்ட் ஆகும் பூனம் பாண்டே, ஊரடங்கு காலத்திலும் தனது காதலருடன் காரில் பயணம் மேற்கொண்டு சிக்கினார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலர் சாம் பாம்பேவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த 12ஆம் தேதி பூனம் பாண்டே - சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் பூனம் பாண்டே, ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திருமணமாகி பத்து நாட்களில் காதல் கணவர் மீது பாலியல் புகார் அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகை பூனம் பாண்டே கூறிய புகாரில், தனது கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கொடுமை படுத்துவதாகவும், இதை எதிர்த்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். எனவே அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இருவருக்குள்ளும் என்ன நடைபெற்ற என்று பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். அதில், “எனக்கும் சாமுக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டது, அது முற்றிய நிலையில் அவர் என்னை தாக்க தொடங்கினார். அவர் என்னை கழுத்தை நெறித்தார், நான் இறக்க போகிறேன் என்றே நினைத்தேன். அவர் என் முகத்தில் குத்தி, என் தலைமுடியை பிடித்து இழுத்து கட்டிலின் முனையில் என் தலையை மோதினார். எப்படியோ அவரது பிடியிலிருந்து விலகி அந்த அறையை வெளியே ஓடி வந்தேன். ஓட்டல் ஊழியர்கள் போலீஸுக்கு போன் செய்ததால் அவர்கள் வந்து சாமை கைது செய்தனர். என்னிடமிருந்தும் புகார் பெற்றுக் கொண்டனர்.
நாங்கள் காதலிக்கும் காலத்திலேயே அவரால் நான் பலமுறை மருத்துவமனைகளில் இருந்துள்ளேன். இந்த மோசமான உறவை நான் பொறுத்துக் கொண்டதற்கான காரணம் நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் என்று நான் நம்பியதுதான். எங்களை எப்போதும் ஒரு சிறந்த ஜோடியாக நான் உருவகித்துக் கொண்டேன். அவரது அதீத காதலாலாலும், பாதுகாப்பின்மையாலும் கோபம் வெளிப்படும். இவை அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துரதிர்ஷ்டவசமாக, இது நல்ல முடிவாக இருக்கவில்லை. காதலுக்கு கண்ணில்லை என்பதற்கு நானே சிறந்த உதாரணம்” என்று கூறியுள்ளார்.