Skip to main content

தமிழில் சூர்யாவுடனா அடுத்த படம்? பூஜா ஹெக்டே ட்வீட்...

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில் சூர்யா மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைந்து படம் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'அருவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். 

ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்த நிலையில் கரோனா தொற்று காரணமாகப் படப்பிடிப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுடன் நாயகியாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகிறார் என்று தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில்,நான் தமிழில் நடிக்க எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை.ஆனால், தமிழில் நடிக்க மும்முரம் காட்டி வருகிறேன். நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். விரைவில் தமிழில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.  


 

சார்ந்த செய்திகள்