Skip to main content

அமீர்கான் பட விவகாரம்; போலீசார் நடத்திய அதிரடி கைது

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Police have arrested those who of Lal Singh Sadha illegally  internet

 

அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லால் சிங் சத்தா'.  இப்படம் 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

 

இதனிடையே இப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வயாகாம்18 நிறுவனம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகாரின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சிலரை கடந்த 12–ந்தேதி கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்  இந்தப் படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன்  இது போன்ற திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக ஒரு குழு அமைத்து அவர்கள் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழ் ராக்கர்ஸ் மற்றும் பிரைம் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் திரைப்படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்வதோடு, அவற்றை விநியோகிப்பதிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

இதுபோன்று படங்களை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதன் காரணமாக திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கைது நடவடிக்கை என்பது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது.

 

இது குறித்து வயாகாம் 18 நிறுவனத்தின் வழக்கறிஞர் அனில் லாலே கூறுகையில், திருட்டுத்தனமாக திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு எதிரான போராட்டத்தில் வயாகாம் 18 தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அத்துடன், திருட்டுத்தனமாக திரைப்படங்களை வெளியிடாத நிலையை உருவாக்குவதற்கான எங்கள் முயற்சியை நாங்கள் தொடருவோம். இது போன்ற அத்துமீறலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம் ஆகும். நாங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியம் என்று கருதுகிறோம். அத்துடன் இவ்வாறு செய்கையில் திரைப்படத்துறையை சார்ந்த அனைத்து தரப்பினரும் நிம்மதியாக இருக்க அது வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வைரலான வீடியோ - வழக்கு தொடுத்து அவசர விளக்கமளித்த அமீர்கான்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Aamir Khan files case for fake video and said Never endorsed any political party

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் திரைபிரபலங்களும் கலந்து கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே கடந்த வாரம் லியோ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. ஆனால் அத்தகவலை சஞ்சய் தத் மறுத்திருந்தார். இந்த நிலையில் மற்றொரு பாலிவுட் முன்னணி நடிகரான அமீர் கான், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து அமீர் கான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமீர் கானின் செய்தித் தொடர்பாளர் பேசியதாவது, “அமீர் கான் தனது 35 ஆண்டுகால வாழ்க்கையில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளித்ததில்லை. கடந்த பல தேர்தல்களில் தேர்தல் கமிஷன் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த தனது முயற்சிகளை எடுத்துள்ளார். அமீர் கான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி சமீபத்தில் வைரலான வீடியோவால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது போலியான வீடியோ என்றும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமீர் தெளிவுபடுத்த விரும்புகிறார். 

மேலும் அனைத்து இந்தியர்களையும் வெளியே வந்து வாக்களிக்குமாறும், நமது தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்குமாறும் கேட்டுக்கொள்கிறார். அமீர் கானின் அந்த வைரல் வீடியோ, ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்பு அவர் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டவை. அதை ஏ.ஐ மூலம் எடிட் செய்துள்ளனர்” என்றார். 

Next Story

ஆட்டோ ஓட்டுநரால் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Auto driver arrested under POCSO Act for misbehaving with girl

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் தொட்டிப்பெட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய  மகன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (27).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது  சிறுமியை ஆசை வார்த்தை கூறி, வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.   

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம்  தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர்கள்  கொடுத்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கோவிந்தராஜன் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்தை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்.