Skip to main content

"எந்த சிபாரிசும் தேவையில்லை..." - ஆஸ்கர் குறித்து பார்த்திபன் ட்வீட்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

parthiban tweet about last film show movie selected as indias official entry in oscar


உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவில் இந்தியா சார்பாக குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' (Chhello Show) படம் போட்டியிட தேர்வாகியுள்ளது. இது குறித்து பல்வேறு திரை பிரபலங்கள் படத்தை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

 

இந்நிலையில் பார்த்திபன் இது குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மகிழ்ச்சி. எந்த கூடுதல் சிபாரிசும் தேவையில்லாமல் ஆஸ்காருக்கு இந்தியாவிலிருந்து அனுப்ப தகுதியான ஒன்றிரண்டு படங்களில் ஒன்று ‘Last film show’ குஜராத்தி படம். (cinema paradiso பாதிப்பில்) ஃபிலிமிலிருந்து டிஜிட்டல் என்ற விஞ்ஞான வளர்ச்சியில் சிக்குண்ட சில உள்ளங்களில் என்னுடையதும் ஒன்று. அதை ஒரு சிறுவனை வைத்து நம் இதயத்தை சில்லு சில்லாக உடைத்து, கடைசியில் the light of HOPE’ அவன் கண் வழிய நாம் காணும்படி செய்த இயக்குநர் பேன் நளின் அவர்களுக்கு வாழ்த்துகள். திறமை எங்கிருந்தாலும் அதை உலகின் முதல் ஆளாய் திறந்த மனதோடு வரவேற்று வாழ்த்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

 

இதனிடையே இந்திய சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்படவுள்ள போட்டியில் 13 படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் தமிழில் பார்த்திபன் இயக்கிய 'இரவின் நிழல்' படமும் இடம்பெற்றது. இது தவிர இந்தியில், பதாய் தோ, ராக்கெட்ரி, ஜுண்ட், பிரம்மாஸ்திரம், தி காஷ்மீர் ஃபைல்ஸ், அனெக் உள்ளிட்ட படங்கள் பங்கேற்றன. அதே போல் தெலுங்கில் ஆர்ஆர்ஆர், ஸ்தலம் படமும் மலையாளத்தில் அரியுப்பு என்ற படமும் பெங்காலியில் அபராஜிதோ என்ற படமும் குஜராத்தில் செல்லோ ஷோ படமும் திமாசா மொழியில் (அசாம்) செம்கோர் என்ற படமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்