Published on 08/09/2018 | Edited on 08/09/2018
மதயானை கூட்டம், கிருமி, சிகை, விக்ரம் வேதா ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கதிர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'பரியேறும் பெருமாள்'. நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கயல் ஆனந்தி நடிக்க, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் இசை நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.