Skip to main content

'ஹிந்தியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என...' - #MeToo குறித்து பார்வதி மேனன் 

Published on 02/11/2018 | Edited on 02/11/2018
parvathy

 

 

 

பாலிவுட்டில் #MeTooவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் பணிபுரிவதில்லை என்ற முடிவை முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சமீபத்தில் எடுத்துத்திருந்த நிலையில் பூ படத்தில் அறிமுகமாகி மரியான் படம் மூலம் தமிழில் பிரபலமான நடிகை பார்வதி மேனன் சமீபத்தில் மும்பையில் நடைபெற்று கொண்டிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு #MeToo குறித்தும், பாலிவுட்டில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் பேசியபோது.... ''#MeToo வி‌ஷயத்தில் ஹிந்தி சினிமா ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. ஹிந்தியில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன்வந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு திரையுலகிலும் இந்த நிலை இல்லை. ஹிந்தி திரையுலகில் கொடுக்கும் குரல் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. இது பாராட்டத்தக்க வி‌ஷயம். மற்ற இடங்களில் பெரும் அமைதியே நிலவுகிறது. அதே நேரத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள ‘விமென்ஸ் சினிமா கலெக்டிவ்’ போன்ற அமைப்பு பாலிவுட்டிலும் தொடங்கப்பட வேண்டும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்