
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் நடிகை டாப்சி தற்போது சத்தமே இல்லாமல் இந்தியில் 4 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் நடிகை டாப்சி இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியபோது...."இந்தியில் தட்கா, சூர்மா, முல்க், மன்மரிஷியான் ஆகிய படங்களில் நடிக்கிறேன். இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. நாம் சபானா, பிங்க் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தின. சில படங்கள் கதாநாயகர்களுக்காகவே ஓடும். பிங்க் படத்தில் அமிதாப்பச்சன் இருந்தது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அவருக்காக தியேட்டரில் கூட்டம் வந்தது. சினிமாவில் எனக்கென்று புதிய பாணியை உருவாக்கி இருக்கிறேன். எனது முழு நடிப்பு திறமையை காட்டும் கதையம்சம் உள்ள படம் இன்னும் அமையவில்லை. அந்த கதைக்காக காத்து இருக்கிறேன். சினிமாவில் எனக்கு நண்பர்கள் கிடையாது" என்றார்.