Skip to main content

புதிய வகை பாம்பிற்கு பிரபல நடிகரின் பெயர்

Published on 23/10/2024 | Edited on 23/10/2024
new himalayan snake species named hollywood actor leonardo dicaprio

மேற்கு இமயமலைப் பகுதியை சேர்ந்த வீரேந்தர் பரத்வாஜ் கரோனோ ஊரடங்கின் போது கடந்த 2020ஆம் ஆண்டு தனது வீட்டின் பின்புறத்தில் ஒரு பாம்பை கண்டுள்ளார். அது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால் அதை புகைப்படம் எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இதையடுத்து அந்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என்பதை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்தனர். 3 ஆண்டுகள் சோதனைக்குப் பிறகு இமயமலை பகுதியில் மட்டும் தென்படக்கூடிய புதிய வகை பாம்பு என்பதை கண்டுபிடித்தனர். இந்த பாம்புகள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 அடி உயரத்தில் வாழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

new himalayan snake species named hollywood actor leonardo dicaprio

இந்த நிலையில் இந்த புதிய வகை பாம்பிற்கு டைட்டானிக் பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ பெயரை குறிக்கும் வகையில் ஆங்கிகுலஸ் டிகாப்ரியோய்(Anguiculus dicaprioi) என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிப்பதை தாண்டி சுற்றுச்சூழல், காலநிலை மாறுபாடு மற்றும் மாசுபாட்டின் மூலம் மனித உடல்நலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டுகிறார். இதனைப் போற்றும் விதமாக புதிய வகை பாம்பிற்கு லியோனார்டோ டிகாப்ரியோ பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்