Skip to main content

விக்னேஷ் சிவன், நயன்தாரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

rwgwg

 

பிரபல இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனமான 'ரவுடி பிக்சர்ஸ்' சார்பில், தயாரித்துள்ள படம் 'நெற்றிக்கண்'. 'அவள்' பட இயக்குனர் மிலந்த் ராவ் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக நயன்தாராவும், முக்கியக் கதாபாத்திரத்தில் அஜ்மலும் நடித்துள்ளனர்.

 

கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், நேற்று ‘நெற்றிக்கண்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது பிரபல கொரியன் படமான 'ப்ளைண்ட்' படத்தின் ரீமேக் என சமீபகாலமாகச் செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்