திரைப்பட உலகில் பொதுவாக இயக்குநர்களோ, நடிகர்களோ, தயாரிப்பாளர்களோ நடிகைகளுக்கு பாலியல் தொல்லை தருகிறார்கள் என்றும் தன்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என நடிகைகள் காலம் தொட்டு குற்றசாட்டுகளை திரைப்படத்துறையினர் மேல் அடுக்கி வருகின்றனர். அது சமூகத்தில் விவாதப்பொருளாகவும் சமீபகாலங்களிலும் மாறி வருகிறது. இந்நிலையில் தற்போது இதற்கு அப்படியே நேர்மாறாக இன்னொரு பிரச்சனையும் தலைதூக்கி உள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா, நேற்றிரவு டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் "திருமணமான ஆண்களின் குடும்பத்தை உடைக்க சில ஹீரோயின்கள் நினைக்கின்றனர். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட கீழ்த்தரமானவர்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் படுக்கையை பகிரவும் தயங்கமாட்டார்கள். அந்த நடிகைகளின் தகவல்களை நான் விரைவில் வெளியிடுவேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து இந்த டுவிட் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்த, பின்பு நேஹா அந்த பதிவை நீக்கி விட்டார். பின்னர் நீக்கிய பதிவிற்கு விளக்கமளித்த அவர்... "நான் வெளியிட்ட கருத்துகள் எனது குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் அல்ல. எனது கணவருடன் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்களின் ஒரு சிலரது நடவடிக்கைகள் என்னை அதிருப்தியடைய செய்துள்ளன. சில ஹீரோயின்கள் திருமணமான ஆண்களின் வாழ்க்கையில் தலையிட்டு, பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர். இதுதொடர்பாக கருத்து கூறினால் லீக் என்ற வார்த்தையால் சர்ச்சையை ஏற்படுத்துவார்கள். நான் பிறரின் கவனத்தை ஈர்க்கவோ, நாடகம் நடத்தவோ பதிவிடவில்லை. எனது கணவருடன் எனக்கு பிரச்சனை என்பது போன்ற கருத்துக்கள் வந்ததாலும், சர்ச்சையை கிளப்பும் என்பதாலும் நான் அந்த ட்விட்டை நீக்கிவிட்டேன். இருப்பினும் இது, நான் குறிப்பிட்ட அந்தப் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். சமூக வலைத்தளங்கள் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும்" என்று மற்றோரு ட்விட்டை பதிவிட்டிருந்தார்.