தமிழில் நேரம், ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழகத்தில் மிகவும் பிரபலமானவர் நஸ்ரியா. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய அப்பாவி நடிப்பாலே ரசிகர்களை கவர்ந்தார். மலையாளத்தில் வெளியான ஓம் சாந்தி ஓசானா படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
![nazriya](http://image.nakkheeran.in/cdn/farfuture/LcqP5PEUt_fQGD3hr7uBzZbro6d5lln8W95FeskAiHE/1572932306/sites/default/files/inline-images/nazriya%201.png)
தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவுக்கு பின்னர் நஸ்ரியா வலம் வருவார் என்று அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டு, நடிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டார். ஆனாலும் சினிமாவை விட்டு விலகாமல் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி சினிமாவில்தான் இருந்தார்.
![miga miga avasaram](http://image.nakkheeran.in/cdn/farfuture/54YLydj75eXgdvfH_BG7RC6s63ascpk5bWMpUGlAs7M/1572932347/sites/default/files/inline-images/500X300-02_5.jpg)
இந்நிலையில் தற்போது நடிகை நஸ்ரியா தனது கணவருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. டிரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரில் நடிகை நஸ்ரியா சிகரெட் அடிப்பது போல போஸ் கொடுத்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.