Skip to main content

புதிய அவதாரம் எடுத்த நயன்தாரா !

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

nayanthara started new business

 

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு, டப்பிங் பணியில்  தீவிரம் காட்டிவருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா அஸ்வின் சரவணன் இயக்கும் கனெக்ட் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை நயன்தாரா நடிப்பது மட்டுமல்லாமல் தனது காதலருடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ்    நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

 

இந்நிலையில் நடிகை நயன்தாரா அழகு சாதன  பொருட்கள் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார்.  தோல் மருத்துவர் ரெனிட்டா ராஜனுடன் இணைந்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் 'தி லிப் பாம் கம்பெனி' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளார்.  மேலும் இந்நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் பணியில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் ஈடுபட்டனர். நயன்தாராவின் இந்த புதிய முயற்சிக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்