நயன்தாரா சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த படம் மிஸ்டர். லோக்கல். இது கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 உள்ளிட்ட படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம் என்றொரு படத்தை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இயக்கினார். இந்த படம் தயாரிப்பு நிறுவனத்தின் சில பிரச்சனைகளால் வெளியாகாமல் தள்ளி தள்ளி போனது.
இந்நிலையில் வருகிற ஜூன் 14ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் வாங்கியுள்ளார் பாலாஜி குமார். இவர் முன்னதாக விடியும் முன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே கொலையுதிர் காலம் என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என பாலாஜி குமார் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி ராமசாமி, கொலையுதிர் காலம் என்ற பெயரில் நயன்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து மனுவுக்கு ஜின் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
இப்படம் தொடங்கிய நாள் முதல் இருந்து தற்போதுவரை ஏதாவது ஒரு சிக்கல் வந்து வெளியாவது தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது.