Skip to main content

நடிகர் சங்க அவசர கூட்டத்தில் 'மீடூ' வுக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றம் !

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
nadigar sangam

 

'மீடூ' மூவ்மெண்ட் மூலம் பெண்கள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  இது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்தது. இதற்கிடையே விஷால் 'உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனே கூறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், அடுத்த சில நாட்களில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு குழு நியமிக்கப்படும் என்றும்  அறிவித்தார். இதையடுத்து  இந்த வி‌ஷயம் தொடர்பாக அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடிகர் சங்கத்தில் நடைபெற இருக்கிறது. அப்போது சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்...

 

 

 

1. அங்கத்தினர்களுடைய உரிமைகளும் சுயமரியாதையும் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட  'விசாகா குழு' செயல்படும் சட்டங்களின் அடிப்படையில் குழு ஒன்று உருவாக்கப்படும். இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மை மகளிரும் உட்பட, குழுவாக அமையும். பிரச்சனைகளை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மனநல மருத்துவர் ஒருவரும் அதில் இடம் பெறுவார். அதற்க்கு ஆண்பால் பெண்பால் பாகுபாடின்றி பிரச்சினைகளை நடு நிலையோடு அணுகி தீர்வுகளை எடுக்கும்.

 

2. படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் சகல பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரை செய்கிறது. என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்