Skip to main content

"பழங்குடி இனத்தவரின் வரலாறு குறித்தும் இப்படம் பேசும்" - அறிமுக இயக்குநர் ஆதர்ஷ் மதிகாந்தம்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

naayaadi movie director speech

 

ஆதர்ஷ் மதிகாந்தம் என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'நாயாடி'. இப்படத்தில் கதாநாயகியாக காதம்பரி நடிக்க அருண் என்பவர் இசையமைத்துள்ளார். மாளவிகா மனோஜ், அரவிந்த்சாமி, நிவாஸ் எஸ். சரவணன் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் கதையைத் திரையில் சொல்லும் இப்படம் வருகிற 16 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகிறது.

 

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராகப் பணிபுரிந்தவருமான ஆதர்ஷ் மதிகாந்தம் பேசுகையில், "திரைப்படத் துறையில் பங்காற்ற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. எனவே, ஆஸ்திரேலியாவில் நான் ஈட்டிய பணத்தைக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளேன். திகில் திரைப்படங்களுக்கு என உள்ள வடிவத்தில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்தும் அவர்கள் வரலாறு குறித்தும் இப்படம் பேசும். 

 

பல்லாண்டுகளாகத் துயரங்களை அனுபவித்து வரும் நாயாடிகள், கடந்த காலத்தில் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பில்லி சூனியம் மற்றும் வூடு எனப்படும் மாந்திரீகங்களைக் கற்று அதை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும், அவர்களின் இக்கால தொடர்பு குறித்தும் இத்திரைப்படம் விவரிக்கும்" என்று கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்