Published on 03/04/2018 | Edited on 04/04/2018

கோலிவுட்டில் பிசி இசைமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் யுவன் ஷங்கர் ராஜா தற்போது கைவசம் 15 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு பட உலகிலும் தற்போது யுவன், முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் தனது கார் திருடப்பட்டதாக சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த மனுவில் தனது விலையுயர்ந்த ஆடி காரை தனது ஓட்டுநர் நவாஸ் கான் தான் திருடிவிட்டதாக குற்றம் சாட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து யுவன் ஷங்கர் ராஜாவின் புகார் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.