2022 ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்', 'விக்ரம்', 'கே.ஜி.எஃப் 2', 'ஆர்.ஆர்.ஆர்', 'பிரம்மாஸ்திரா' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. இதில் பல படங்கள் எதிர்பார்த்ததுபோல் நல்ல வசூலையும் சில படங்கள் எதிர்பாராத தோல்வியையும் சந்தித்தன.
இந்நிலையில், கூகுள் நிறுவனம் இந்தாண்டு தங்களது தளத்தில் அதிகம் தேடப்பட்ட ஆசியாவைச் சேர்ந்த 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்கொரியாவைச் சார்ந்த இசைக்குழுவான 'பிடிஎஸ்' (BTS)-இன் பாப் பாடகர்களான 'வி' என அழைக்கப்படும் கிம் டே-ஹியுங் மற்றும் ஜங்குக் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளனர். மூன்றாவது இடத்தில இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி உள்ளார்.
இந்த லிஸ்டில் தமிழ்த் திரைத்துறையைச் சார்ந்த நடிகர்களைப் பொறுத்தவரை விஜய் (15), சூர்யா (45), தனுஷ் (46), ரஜினிகாந்த (68), அஜித்குமார் (78) ஆகிய இடங்களில் உள்ளனர்.
இந்தியத் திரை நடிகர்களைப் பொறுத்தவரை சல்மான்கான் (7), ஷாருக்கான் (9), அக்ஷய்குமார் (16), அமிதாப் பச்சன் (23), அல்லு அர்ஜுன் (25), ரன்பீர் கபூர் (28), ஆமீர் கான்(35), ஹ்ரித்திக் ரோஷன் (39), மகேஷ் பாபு (41), அஜய் தேவ்கன் (42), ராம் சரண் (57), ரன்வீர் சிங் (61), ஜூனியர் என்.டி.ஆர் (64), பிரபாஸ் (66), சிரஞ்சீவி (70), விஜய் தேவரகொண்டா (75) உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்தியத் திரை நடிகைகள் பொறுத்தவரை கத்ரினா கைஃப் (4), ஆலியா பட் (5), பிரியங்கா சோப்ரா (10), கரீனா கபூர் (11), காஜல் அகர்வால் (13), தீபிகா படுகோனே (26), தமன்னா (31), நயன்தாரா (33), ஷ்ரத்தா கபூர் (40), கஜோல் (44), அனுஷ்கா ஷெட்டி (47), அனுஷ்கா சர்மா (50), பூஜா ஹெக்டே (56), ஷில்பா ஷெட்டி (59), கியாரா அத்வானி (60), கீர்த்தி சுரேஷ் (62), சாய்பல்லவி (79), கங்கனா ரணாவத் (91), ரகுல் ப்ரீத் சிங் (96) உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் பொறுத்தவரை, எம்.எஸ் தோனி (24), ரோஹித் சர்மா (32), சச்சின் டெண்டுல்கர் (51), ஹர்திக் பாண்டியா (58) உள்ளிட்டோர் உள்ளனர்.