![mohit](http://image.nakkheeran.in/cdn/farfuture/esz1AyHETUcge1IkaOoM6TwWxNk5lCk0tVY_Blm893U/1590401521/sites/default/files/inline-images/mohit_0.jpg)
'உவா', 'மிலன் டாக்கீஸ்' சல்மான் கானுடன் 'ரெடி', பரினீதி சோப்ராவுடன் 'ஜபாரியா ஜோடி' உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் மோஹித். ராணி முகர்ஜி, சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகும் 'பண்டீ அவுர் பப்ளி 2' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஜனவரி மாதம் முதல் அந்தப் படத்தில் நடித்து வந்தார்.
கடந்த ஆறு மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிகிச்சையை மோஹித் மேற்கொண்டிருந்தார். நோயிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்த நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக அவரது திரையுலக நண்பர், இயக்குனர் ராஜ் சாண்டில்யா (ட்ரீம் கேர்ள் இயக்குனர்) கூறியுள்ளார். அவருடைய உடலில் நோய் தீவிரமடைந்ததால், சனிக்கிழமை, மதுராவில் இருக்கும் அவரது இல்லத்தில் மோஹித் உயிர் பிரிந்தது.
மோஹித்தின் மரணத்துக்கு பல பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.