Skip to main content

அஜித் பட ஷூட்டில் நடிகர்கள், தொழிலாளர்கள் மொபைல் பயன்படுத்த தடை! 

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

விஸ்வாசம் படத்தின் பெரு வெற்றியை அடுத்து அஜித்குமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் நேர்கொண்ட பார்வை. இது ஹிந்தி படமான பிங்க்கின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹெச்.வினோத்தான் இயக்கினார். அனைவரும் எதிர்பார்த்ததை போலவே இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பையும், ரசிகர்களிடையே பெரு ஆதரவையும் பெற்றது. 
 

nerkonda parvai


இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை அடுத்து இதே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருடன் இணைந்து அஜித் நடிக்கும் படம்தான் வலிமை. இந்த படத்தின் பூஜை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே போடப்பட்டு, தற்போதுதான் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. இடையே ஷூட்டிங்கிறகான லொக்கேஷன், நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட பல வேலைகள் நடந்தது.
 

hero


இந்நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி வலிமை படத்தின் ஷூட்டிங் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய சண்டை காட்சி என்று சொல்லப்படுகிறது. பெரிய நடிகர்களின் படம் என்றால் அவர்களின் தோற்றத்திலிருந்து பலவிஷயங்கள் ரகசியம் காக்கப்பட்டு, அதை தியேட்டரில் சர்ப்ரைஸாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் அஜித் தோற்றம் மற்றும் படக்காட்சிகள் வெளியாவதை தடுக்க துணை நடிகர்-நடிகைகளும், பெப்சி தொழிலாளர்களும் படப்பிடிப்பு அரங்குக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வலிமை படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கவில்லை. ஆனால், அஜித்திற்கு ஹீரோயினாக யாமி கௌதம், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி வருகிறது. ஆர் எக்ஸ் 100, கேங்க் லீடர், 90 எம் எல் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என்பது குறிப்பிடத்தக்கது. 
 

dabaang


நடிகர் அஜித் இப்படத்தில் போலீஸாகவும், பல நாட்கள் கழித்து கருப்பு டை போட்டுக்கொண்ட தோற்றத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த வருட தீபாவளி பண்டிகைக்கு வலிமை படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

 

சார்ந்த செய்திகள்