
தயாரிப்பாளர் சசி காந்த் இயக்குநராக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘டெஸ்ட்’. இப்படத்தில் மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மற்றும் சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குவதோடு சசி காந்தே தயாரித்தும் உள்ளார். நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார்.
கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் நாளை(04.04.2025) நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படம் தொடர்பாக படக்குழுவினர் சசிகாந்த் மற்றும் மாதவன் ஆகியோரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது படத்தை தாண்டி நிறைய விஷயங்கள் குறித்தான கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர்.
அந்த வகையில் முன்னணி நடிகர்களான விஜய் சினிமாவைத் தாண்டி அரசியலிலும், அஜித் கார் பந்தயத்திலும் ஆர்வமுடன் இருப்பது போல் மாதவனுக்கு என்ன விஷயத்தில் ஆர்வம் என கேட்ட போது, வாழ்க்கையில் இருக்கிற எல்லா அனுபவங்களையும் அனுபவித்து விட வேண்டும் என பதிலளித்தார். மேலும் மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிற எல்லாரும் அரசியலுக்கு வரணும் என்றும் அப்படி நல்லது நினைக்கிற நண்பரா விஜய்யை எனக்கு தெரியும் என்றும் கூறி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார்.