ஆன்மே கிரியேஷன்ஸ் சார்பில் அனில்குமார் தயாரித்து, புதுமுக இயக்குனர் பிரதீஷ் தீபு இயக்கி, தமிழ், ஹிந்தி ஆகிய இருமொழிகளில் தயாராகும் படம் "மேடி @ மாதவ்". மாஸ்டர் அஞ்சய் நாயகனாக அறிமுகமாகும் இப்படம் விஞ்ஞான அறிவையும், தாய்ப்பாசத்தையும் மையக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. "மாதவ்" கதாபாத்திரத்தில் நடிக்கும் மாஸ்டர் அஞ்சய் புலியுடன் நடித்த காட்சிகள் தொடர்ந்து 8 நாட்கள் படமாக்கப்பட்டது. வீரமும், விவேகமும் மிகுந்த கதாபாத்திரமாக இக்கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபு, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ரிச்சா பாலோட், வையாபுரி, முத்துகளை, ரியாஸ்கான், பானு பிரகாஷ், ரோஷினி வாலியா, ஆதர்ஷ் , ஆதித் மற்றும் புதுமுகம் நேகாகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அறிமுக வில்லன்களாக மும்பை நடிகர்கள் ஜீல்பி சையத், ஷாவெர் அலி ஆகியோரும் நடிக்கின்றனர். கோவா, மூனாறு, செர்ராய் கடற்கரை, நிலம்பூர், சாயல்குடி, பொள்ளாச்சி, சென்னை ஆகிய இடங்களில் 100 நாட்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்றது. சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதமாக 'மேடி @ மாதவ்' திரைப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது.