Skip to main content

சிம்பு படம் வருமா? வராதா? தயாரிப்பாளர் விளக்கம்...

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

சமீபத்தில் சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படம் கைவிடப்பட்டதாக தகவல் சமூக வலைதளத்தில் பரவியது. இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மாநாடு படத்தின் தயரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. 
 


‘செக்கச் சிவந்த ராஜா’ படத்திற்கு பின் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில்  ‘வந்தா ராஜாவாதன் வருவேன்’ மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில்  ‘மாநாடு’ என இரு படங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. முதலில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து முடித்து வெளியான பின், மாநாடு படத்தில் நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. 
 

தற்போது வந்தா ராஜாவாதன் வருவேன் படம் வெளியாகியும் இன்றும் மாநாடு படம் குறித்து எந்த தகவலும் வராததை அடுத்து, இப்படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டது என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மாநாடு ஃபர்ஸ்ட் லுக் வெளியான பின்பு, சிம்புவின் பிறந்தநாள் அன்று பூஜை போடப்படும் என்று சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

 

இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர், “படம் கைவிடப்பட்டதாக வதந்திதகளை பரப்ப வேண்டாம். படப்பிடிப்பை தொடங்குவது என்பது சாதாரணமானது அல்ல. மாநாடு படம் திட்டமிட்டபடி எடுக்கப்படும். படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இறுதியில் தர்மமே வெல்லும்” - ‘உயிர் தமிழுக்கு’ அமீர்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Ameer Uyir Thamizhukku teaser released

இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. மேலும் அடுத்து வெளியான போஸ்டரில், 'இது தமிழகம் அல்ல... தமிழ்நாடு' எனக் குறிப்பிடப்பட்டது. மேலும் போஸ்டரில் மாநாடு கூட்டம் நடப்பது போலவும் அதற்காக மறைந்த தலைவர்கள் கலைஞர், மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட பேனர்கள் இருக்க நடுவில் அமீரின் பேனர் இடம்பெற்றிருந்தது. இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.    

இதையடுத்து இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அமீர் கைதாவது போல் காட்சி இடம்பெற்றிருக்கும் நிலையில் அவர் பேசும், பணம், பதவி, பவரு... இந்த மூணெழுத்தையும் அனுபவிச்சது மாதிரி ஜெயில் என்ற மூணு எழுத்தையும் அனுபவிச்சா தான முழு அரசியல்வாதியாவ முடியும்” வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமீர் பேசும், “தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்” என்று இடம் பெறும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story

கூட்ட நெரிசல் - சேதமடைந்த விஜய்யின் கார்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
vijay car damage in kerala the goat movie shoot

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்துவிடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” எனப் பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெறுகிறது. இதற்காக இன்று விமானம் மூலம் கேரளாவிற்குச் சென்றார் விஜய். காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரை காண கேரள திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். விஜய் வந்து இறங்கியதும் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார் விஜய். 

vijay car damage in kerala the goat movie shoot

அவர் வெளியில் செல்லும் போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்துள்ளனர். அதனால் கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. உள்ளே உட்கார்ந்திருந்த விஜய்யும் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்தார். ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.