தொண்டன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சமுத்திரக்கனி தற்போது நாடோடிகள் 2ஆம் பாகத்தை இயக்கி, நடித்து வருகிறார். ஒன்பது வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற நாடோடிகள் படத்தில் நடித்த இயக்குனர் சசிகுமாரும் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் சமுத்திரகனி, சசிகுமார் இருவரும் இப்படத்துக்காக பழைய தோற்றம் வர வேண்டும் என்று எடையை குறைக்கும் புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். இதற்காக இருவரும் அசைவ, சமைத்த உணவுகளை சாப்பிடுவதை தற்காலிகமாக நிறுத்தி விட்டார்கள். பெரும்பாலும் வேர்கடலை, தேங்காய், இளநீர், கற்றாழை ஜூஸ் போன்ற இயற்கை உணவுகளையே சாப்பிடுகிறார்கள். மேலும் தீவிர உடற்பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் பாகம் எந்த அளவு பேசப்பட்டதோ அதைவிட பல மடங்கு இப்படம் பேசவேண்டும் என்ற காரணத்திற்காக இப்படி வித்தியாசமான முயற்சியில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.