![Kicha Sudeep Venkat Prabhu movie update](http://image.nakkheeran.in/cdn/farfuture/J_d7nNYGxofhVJNAULfip0tyE2lYlMJPNIWZg9TD3O0/1677501183/sites/default/files/inline-images/262_4.jpg)
இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது நாக சைதன்யாவை வைத்து 'கஸ்டடி' என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் அண்மையில் படக்குழு அதனை நிறைவு செய்துள்ளது.
தமிழைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு ஹீரோவை வைத்து படம் எடுத்து வரும் வெங்கட் பிரபு அடுத்ததாக கன்னட ஹீரோவை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளதாகத் தெரிகிறது. கன்னடத்தில் முன்னணி நடிகராக இருக்கும் கிச்சா சுதீப்பை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியான நிலையில் அப்படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படம் பான் இந்தியா படமாக ஆக்ஷன் ஜானரில் தயாராகவுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.