கலைமாமணி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் சபிதா ஜோசப்பை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அப்போது அவர் மலையாள திரையுலகில் வெளியான ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை குறித்தும் பாலியல் புகார்களில் பல நடிகர்கள் சிக்கியுள்ளதையடுத்து மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உட்பட மற்ற செயற்குழு உறுப்பினர்களின் பதிவி விலகல் குறித்தும் அதன் பின்னணியை பற்றியும் நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.
எழுத்தாளர் சபிதா ஜோசப் பேசுகையில்,“பிரபலமான நடிகை ஒருவரை பாலியல் ரீதியாத ஒரு பிரபல நடிகர் தொல்லை கொடுத்திருக்கிறார். அப்போதுதான் இந்த பிரச்சனை கிளம்பியது. பாலியல் தொல்லை கொடுத்த நடிகரின் மனைவி மஞ்சு வாரியர் அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன்பிறகு மீண்டும் ஒரு நடிகை அவரை திருமணம் செய்துகொண்டார். அந்த சமயத்தில் அந்த பாலியல் தொல்லை சம்பவத்தில் சில மாஃபியா ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது, இதையடுத்து ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை செய்து அதை 2019ஆம் ஆண்டே அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டனர். இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என்றும் வெளியிட்டால் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்றும் பெரிய நடிகர்கள் சிலர் நெருக்கடி தந்துள்ளனர்.
பெரிய நடிகர்கள் என்று சொல்லும்போது மம்முட்டிக்கு நல்ல இமேஜ்தான் இருக்கு, சில பெரிய நடிகைகள் பெண்களை மம்முக்கா மதிக்க கூடியவர் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் மோகன்லால் ராஜினாமா பின்னணியில் விஷயம் இருக்கிறது. அவர் குறித்து சில பத்திரிகையாளர்களிடம் கேட்டபோது அந்த அளவிற்கு நல்ல அபிப்ராயம் இல்லை என்பது தெரிகிறது. சித்திக், முகேஷ் போன்ற நடிகர் சங்க நிர்வாகிகள் மீது நேரடியாக புகார் வந்ததால் கூண்டோடு 15 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதே மோகன்லால்தான் முன்பு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகருக்கு சங்கத்தில் உறுப்பினர் அட்டை கொடுத்திருக்கிறார். அதை தரக்கூடாது என பல போராட்டங்கள் நடந்தது. பாலியல் தொல்லை கொடுத்த நடிகருக்கு மோகன்லால் ஆதரவாக இருக்கிறார் என்றுதான் அந்த போராட்டம் செய்தார்கள்.
பெரிய மாஃபியா கும்பலால் தான் இதுபோல பெண்களுக்கு அச்சுறுத்தல் வருகிறது. இது புதுமுக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் பட வாய்ப்பு தருவதாகவும் இல்லையென்றால் அவர்கள் நடித்த காட்சிகளை கூட படத்தில் இருந்து எடுத்து விடுவதாகவும் அந்த கும்பல் செயல்பட்டு வந்திருக்கிறது. ஊர்வசி சொன்னதுபோல் மலையாளம், தமிழ் என அனைத்து துறையிலும் இதுபோல நடக்கத்தான் செய்கிறது. மலையாள நடிகர் சங்கத்தில் டோவினோ தாமஸ் ராஜினாமா செய்யாமல் இருக்கிறார் என்றால் அவர் மீது எந்த குற்றமும் என்பதால்தான் அவர் இன்னும் பதவியிலிருந்து விலகாமல் உறுதியாக இருக்கிறார். மம்முட்டி, பிரித்விராஜ் ஆகியோர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்காக ராஜினாமாக செய்தவர்கள் தப்பானவர்கள் என்று சொல்லவில்லை அது அவர்களுக்குத்தான் தெரியும். இன்னும் ஒரு சில நாட்களில் இதைப் பற்றி முடிவு தெரிந்துவிடும்” என்றார்.